உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் பனி மூட்டம்

வால்பாறையில் பனி மூட்டம்

வால்பாறை; வால்பாறையில் பருவமழைக்கு பின் தற்போது குளுகுளு சீசன் நிலவுவதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர்.கடந்த ஜனவரி மாதத்திற்கு பின், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவுகிறது. பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், அதிகாலை நேரத்தில் படரும் பனிமூட்டத்தை சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் மாறிவரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், எஸ்டேட் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது.குறிப்பாக, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், காலை நேரத்தில் (7:00 மணி வரை) பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், எதிரே வரும் வனவிலங்குகள் தொழிலாளர்களின் பார்வைக்கு தெரிவதில்லை. அதனால், காலை, 8:00 மணிக்கு பின் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல அந்தந்த எஸ்டேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ