உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமூக பாதுகாப்பு திட்டம்; தபால் துறை விழிப்புணர்வு

சமூக பாதுகாப்பு திட்டம்; தபால் துறை விழிப்புணர்வு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் சார்பில், பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.இம்மையத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு தபால் துறை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், அஞ்சல் துறை பணிகள் மற்றும் பொதுமக்கள் பயன் தரும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.முகாமில், ஆர்.டி., தொடர்பான வைப்பு நிதி திட்டம், எஸ்.சி.எஸ்.எஸ்., முதியோர் சேமிப்பு திட்டம், கே.வி.பி., எனப்படும் கிசான் விகாஸ் பத்திரம், டிபாசிட்டுகள், பப்ளிக் பிராவிடண்ட் பண்ட், நேஷனல் சேவிங் சர்டிபிகேட், சுகன்யா சங்கவி அக்கவுண்ட், செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் தபால் துறை வாயிலாக நடக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.கே.வி., தபால் நிலைய தலைமை அதிகாரி வித்யா, தபால் ஊழியர் சுபத்ரா, தேவராஜ் ஆகியோர் பங்கேற்று விளக்கம் அளித்தனர். மேலும், முகாமில் பங்கேற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். முகாமில், 30க்கும் மேற்பட்ட பெண்கள், ரோட்டரி சமுதாய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ