உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவணங்கள் இல்லாத மண் லாரி பறிமுதல்

ஆவணங்கள் இல்லாத மண் லாரி பறிமுதல்

அன்னுார்: அன்னுாரில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இல்லாத மண் லாரியை பறிமுதல் செய்தனர். சிறப்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில், அன்னுார் சத்தி சாலையில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வடக்கலுாரில் இருந்து மண் லோடுடன் வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது, தகுதி சான்று, இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு சான்று ஆகியவை இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ‘லாரி மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை