உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வீஸ் ஓட்டுகள் எண்ணுவதற்கு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சர்வீஸ் ஓட்டுகள் எண்ணுவதற்கு அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

கோவை;சேவை வாக்காளர்கள் அளித்த ஓட்டுகளை (சர்வீஸ் ஓட்டு) எவ்வாறு எண்ணுவது என்பது தொடர்பான பயிற்சி, தேர்தல் அலுவலர்களுக்கு ஆன்-லைன் முறையில் நேற்று அளிக்கப்பட்டது.கோவை லோக்சபா தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு தனியாக ஒரு அறை தயார் செய்யப்பட்டு, ஆறு டேபிள்கள் போடப்பட்டுள்ளன. இதேபோல், 'சர்வீஸ்' ஓட்டுகள் எண்ணுவதற்கும் தனி டேபிள் போடப்பட்டுள்ளது. கோவை லோக்சபா தொகுதியில், 306 சர்வீஸ் ஓட்டுகள் இருக்கின்றன.ராணுவ வீரர்கள், படைப்பிரிவு அலுவலர்கள் மற்றும் இவர்களுடன் வசிக்கும் குடும்பத்தினரை, சேவை வாக்காளர்களாக வகைப்படுத்தி உள்ளனர்.இவர்கள் ஏற்கனவே சேவை வாக்காளர்களாக பதிவு செய்திருக்க வேண்டும். இவர்களுக்கான ஓட்டுச்சீட்டை, தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பி வைப்பார். தற்போது ஆன்-லைன் முறையிலும் ஓட்டுச்சீட்டு அனுப்பப்படுகிறது.இவ்வாறு பெறப்படும் சர்வீஸ் ஓட்டுகளை, எவ்வாறு எண்ண வேண்டும் என்பது தொடர்பான பயிற்சி, தேர்தல் அலுவலர்களுக்கு, ஆன்-லைன் முறையில் அளிக்கப்பட்டது.பெறப்பட்ட சர்வீஸ் ஓட்டுகளை ஸ்கேன் செய்து, அச்சுப்பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். அவை செல்லத்தக்கது தானா என்பதையும், உறுதி செய்ய வேண்டும்.படிவத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் சரியானதா என்பதை கவனத்தில் கொண்டு, ஓட்டு எண்ணிக்கையுடன் சேர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ