உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.ஆர்.எம்.யு., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யு., ஆர்ப்பாட்டம்

கோவை: அங்கீகார சங்க தேர்தலில் ஓட்டு போட்ட ரயில்வே தொழிலாளர்கள் அனைவரையும் ‘நாய்கள்’ என்று மேடையில் பேசியதாக டி.ஆர்.இ.யு., சங்க நிர்வாகியை கண்டித்து, எஸ்.ஆர்.எம்.யு., கோவை கிளை சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை ரயில்வே பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சேலம் கோட்ட தலைவர் நவின் தலைமை வகித்தார். துணை செயலாளர் ஜோன், கோவை கிளை செயலாளர் முஜித் ரகுமான் உள்ளிட்டோர் ‘அவமதிப்பு செய்தவர் மீது அவதுாறு வழக்கு தொடுத்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !