உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில கால்பந்து போட்டி சென்னை பள்ளி அணி முதலிடம்

மாநில கால்பந்து போட்டி சென்னை பள்ளி அணி முதலிடம்

கோவை;ரத்தினம் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் சென்னை டான் பாஸ்கோ அணி முதலிடம் பிடித்தது.ரத்தினம் கல்வி குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான 'கோல்டு கப்' கால்பந்து போட்டி ரத்தினம் கல்லுாரி கால்பந்து மைதானத்தில் நடந்தது. இதில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இதன் இறுதிப்போட்டியில் அசத்தலாக விளையாடி சென்னை டான் பாஸ்கோ பள்ளி முதலிடம் பிடித்தது. திருச்சி காஜாமியான் பள்ளி இரண்டாமிடத்தையும், கோவை ரத்தினம் கே.பி.எம்., பள்ளி மூன்றாமிடத்தையும் பிடித்தன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் உதவி கமிஷனனர் காரிகால் பாரி சங்கர், ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில், ரத்தினம் குழும விளையாட்டு மேம்பாட்டு இயக்குனர் ராமன் விஜயன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை