உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் இன்று மாநில கைப்பந்து போட்டி

வால்பாறையில் இன்று மாநில கைப்பந்து போட்டி

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) ரயான் டிவிஷன் நேருஜி மன்றத்தின் சார்பில், 27ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.இன்று, 15ம் தேதி, நாளை 16ம் தேதி இரு நாட்கள் நடைபெறும் கைப்பந்து போட்டியில் கோவை, திருப்பூர், கேரளா, பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.வரும், 16ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, முதல் பரிசாக, 20,001; இரண்டாவது பரிசாக, 10,001; மூன்றாவது பரிசாக, 5,001; நான்காவது பரிசாக, 3,001 ரூபாய் மற்றும் சுழற்க்கோப்பையும் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ