ஹேக்கத்தான் போட்டியில் பரிசை தட்டிய மாணவிகள்
கோவை, : கண்ணம்பாளையம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், தமிழக அளவிலான கல்லுாரி மாணவிகளுக்கான, ஹேக்கத்தான் போட்டி நடந்தது.தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, கல்லுாரி கலையரங்கத்தில் போட்டியை நடத்தியது.ஈரோடு செங்குந்தர் கல்லுாரியின் மாணவி சவுமியா குழு மற்றும் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரியின் மாணவி ஷர்மிதா அணி, முதல் பரிசை வென்றது. இரு அணியினருக்கும், முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது.