| ADDED : ஜூலை 31, 2024 02:13 AM
பெ.நா.பாளையம்:சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் செட் அமைக்க வேளாண்துறை மானியம் வழங்குகிறது.முதலமைச்சரின் சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப்செட் வழங்கும் திட்டம், வேளாண் பொறியியல் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பம்ப்செட் அமைக்கும் செலவில் பொது பிரிவினருக்கு, 60 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு, 70 சதவீதமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு, சிறு, குறு விவசாயிகளுக்கு, 80 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.இந்த மானியம் பெற உழவன் செயலி அல்லது அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.