உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளியில் ஆசிரியர் தினம்: முன்னாள் மாணவர்கள் சிறப்பு

அரசு பள்ளியில் ஆசிரியர் தினம்: முன்னாள் மாணவர்கள் சிறப்பு

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1963--- 64ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவர்கள் இணைந்து, ஆசிரியர் தின விழா கொண்டாடினர். இதில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் தங்களுக்கு கல்வி கற்பித்து, மறைந்த ஆசிரியர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எஸ்.எஸ்.எல்.சி.,யில், பாடம் கற்பித்த இரண்டு ஆசிரியர்களுக்கு, சால்வை அணிவித்து கவுரவித்தனர். முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !