வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படவேண்டும். இவர்கள் டிஸ்மிஸ் செய்ய படவேண்டும்
தொண்டாமுத்தூர்;செல்லப்பகவுண்டன் புதூர், சிறுவாணி மெயின்ரோட்டில், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக, தோண்டப்பட்ட குழியில், தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.தேவராயபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்,37; திருமணமானவர். தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, பணி முடித்து விட்டு, தனது பைக்கில் ஹெல்மெட் அணிந்து, சிறுவாணி மெயின் ரோடு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.செல்லப்பகவுண்டன்புதூர் பிரிவு, சிறுவாணி மெயின்ரோட்டில், மேற்கு புறவழிச்சாலை பணிக்காக, சிறுவாணி மெயின் ரோட்டின் நடுவே குழி தோண்டப்பட்டுள்ளது.இக்குழியின், இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. குழி தோண்டப்பட்ட இடத்தில், போதிய தெருவிளக்குகள் இல்லை.அதோடு, குழி தோண்டப்பட்டுள்ள பகுதியில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை, ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இதனால் கார்த்திக், பைக்குடன் சுமார், 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்தார்.ஹெல்மெட் கழன்று, முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பேரூர் போலீசார், இன்ப்ரா எனும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று விபத்து நடந்தபின், குழி தோண்டப்பட்ட இடத்தை சுற்றிலும், மண் கொட்டினர். இதை முன்பே செய்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.
ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் இறந்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படவேண்டும். இவர்கள் டிஸ்மிஸ் செய்ய படவேண்டும்