உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சில் டிக்கெட் தருவதில்லை; பயணியர் புகார்

பஸ்சில் டிக்கெட் தருவதில்லை; பயணியர் புகார்

கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - கோவை ரோட்டில் ஏராளமான தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதில், பொள்ளாச்சி அல்லது கோவை (உக்கடம்) பகுதியில் பஸ் ஏறும் பயணியர், அவர்கள் செல்லும் இடத்திற்கு டிக்கெட் வாங்கி பயணிப்பார்கள்.ஆனால் பொள்ளாச்சியில் இருந்து பஸ் ஏறும் பயணியர் சிலர், உக்கடம் செல்லாமல் இடைப்பட்ட பஸ் நிறுத்தங்களான கிணத்துக்கடவு, கோவில்பாளையம் போன்ற இடங்களில் இறங்க வேண்டும் என கண்டெக்டரிடம் டிக்கெட் கேட்டால், கடைசியில் வழங்குகிறேன் என கூறி, டிக்கெட் வழங்குவதை தவிர்க்கின்றார்.இதுகுறித்து, பயணியர் டிக்கெட் குறித்து கேட்டால் மட்டுமே வழங்குகின்றனர். மேலும், பஸ் இறங்கும் போது கொடுக்கிறேன் என கூறுகின்றனர். ஆனால் டிக்கெட்டுக்கான பணம் மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டு டிக்கெட் தராமல் இருந்து விடுகின்றனர். இதனால் பஸ் உரிமையாளர்களுக்குநஷ்டமே ஏற்படுகிறது.இதுகுறித்து பயணியர் கூறியதாவது, பஸ்சில் பயணம் செய்யும் பயணியருக்கு முறையாக டிக்கெட் வாங்குவது இல்லை. உதாரணமாக ஒரு நாளுக்கு, குறைந்தது 25 பயணியர்க்கு டிக்கெட் வழங்காமல் இருந்தால், குறைந்தது 500 ரூபாய் எடுக்கிறார்கள்.இது பஸ் உரிமையாளர் மற்றும் பயணியரை ஏமாற்றும் விதமாக உள்ளது. எனவே, பஸ் உரிமையாளர்கள் இது போன்று நடக்கும் தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பயணியர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை