உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்காத அரசு!

சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்காத அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை : உடுமலை அருகே, மூடப்பட்டுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க தேவையான நிதி ஒதுக்க கோரி, கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1961ம் ஆண்டு, உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டது. கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.ஆண்டுக்கு, 11 மாதங்கள், தினமும், 2,500 டன் கரும்பு அரவை, அதிக பிழிதிறன் காரணமாக சர்க்கரை உற்பத்தியில் சிறப்பாக இயங்கி வந்தது. 1994ம் ஆண்டு, துணை ஆலையாக, ஆண்டுக்கு, 1.65 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எரிசாராய ஆலையும் அமைக்கப்பட்டது.பழமையான இந்த ஆலை இயந்திரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆண்டுதோறும் ஆலை இயக்கத்தில் சிக்கல், பிழிதிறன் குறைவு என பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் மூடப்பட்டது.இதனால், விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் விவசாய கூலி தொழிலாளர்கள் பாதித்தனர். இந்நிலையில், ஆலையை புனரமைக்க தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாலதண்டபாணி கூறியதாவது:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக புனரமைக்க, 80 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடும், ஆலை இயங்கினால், ஆறு ஆண்டுகளில் அக்கடனை திரும்ப செலுத்தும் வழிமுறைகள் குறித்தும், விரிவான அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்காததால், பாரம்பரியமும், சிறப்பும் கொண்ட சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதித்துள்ளனர்.எனவே, ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்க வலியுறுத்தி, வரும், 11ம் தேதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதற்கும் தீர்வு கிடைக்காவிட்டால், விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆலை முன் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rassi
ஜூலை 07, 2024 13:43

ஏற்கனவே கப்பலும் பழமும் சேர்ந்து இந்த கம்பெனியை ஆட்டய போட்டாச்சுன்னு ஒரு யூடியுப் பதிவு வலம் வருதே. சாராய ஆலையாக மாறிவிட்டதாகவும் சொல்லப் படுகிறது


manokaransubbia coimbatore
ஜூலை 07, 2024 13:22

மகளிர் உரிமை திட்டத்திற்கு வருஷம் 12000 கோடி ஒதுக்கீடு சர்க்கரை ஆலை புணராபிக்கு வெறும் 80 கோடி ஒதுக்காத விடியல் அரசு எத்தனை பள்ளிகள் கூரை பெயர்ந்து விழுகின்றன அதை பற்றி அக்கறை இந்த அரசுக்கு துளியும் இல்லை. காசு 2000,5000 ஓட்டுக்கு கொடு ஆட்சியை பிடி கொள்ளை அடி.தமிழக ஜனநாயம் விலை போய் எத்தனையோ வருடம் ஆகி விட்டது. வாழ்க விடியல் வாழ்க விடியல் வழித்திதோன்றல்.


N Sasikumar Yadhav
ஜூலை 07, 2024 10:39

திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை சாராய ஆலைக்கு விற்றதை போல இதையும் விற்க திட்டம் போட்டிருகைகிறதோ என்னவோ திமுக தலைமையிலான விடியாத திமுக அரசு


C KALIDAS
ஜூலை 07, 2024 09:35

திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் இருவர் பொறுப்பில் உள்ளனர். மூத்த அமைச்சர் ஒரு அடிப்படை விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். சர்க்கரைப் பொருள் உற்பத்தியை பற்றி அறிந்தவர். இது போன்ற மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுகிற மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சார்ந்த பிரதான தொழிற்சாலை கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டிருப்பதும் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கு தற்காலிக ஏற்பாடாக மாற்று ஆலைகளை அரவைக்காக அரசு ஏற்பாடு செய்துள்ளதும் உள்ளபடியே பெரும் நிர்வாக சீர்கேடு தான்.


Svs Yaadum oore
ஜூலை 07, 2024 08:44

தமிழ் நாட்டில் விவசாயம் என்றோ படுத்துவிட்டது .....விவசாய வளர்ச்சி என்பது நெகடிவ் ....ஆனால் வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளை ...தமிழ் நாட்டில் ஐம்பது சதம் மக்கள் விவசாயத்தை நம்பியே வேலை வாய்ப்பு வாழ்க்கை .....காவேரி தண்ணீர் வராமல் போனாலும் விவசாயிகள் விடியலுக்குத்தான் வோட்டு ....காரணம் சினிமா தொலைக்காட்சி நடிகர் நடிகைகள் பிரச்சாரம் , பத்திரிகைகள் யூடூப்பில் பார்த்து வோட்டு போடுபவன் , காசுக்கு வோட்டு , கள்ள சாராயம் டாஸ்மாக் என்று பல காரணங்கள் .....சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மை மூளை சலவை செய்யப்பட்ட மனிதர்கள் ...சுயமாக சிந்திக்கும் திறனற்றவர்கள் ...


ராமகிருஷ்ணன்
ஜூலை 07, 2024 08:02

சக்கரை ஆலையை ஈனகிரையத்துக்கு வாங்கி சாராய ஆலையாக மாற்றுவது என்றால் திமுகவினர் ஓடோடி வருவார்கள்


Sun
ஜூலை 07, 2024 07:05

ஆலையின் உரிமத்தை கொடுக்க வேண்டியவர்களிடம் கொடுத்து விட்டால் பணம் வந்து கொட்டும்


Svs Yaadum oore
ஜூலை 07, 2024 06:36

18 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனராம் .......கரும்பு விவசாயிகளுக்கெல்லாம் இந்த சமூக நீதி விடியல் அரசு நிதி ஒதுக்காது ....பல ஆயிரம் கோடிகளில் பரந்தூர் விமான நிலையம் , ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் என்று ஜீ சதுரம் ரியல் எஸ்டேட் கொள்ளையடிக்க பல ஆயிரம் கோடிகள் மத சார்பின்மையாக நிதி ஒதுக்குவார்கள்.....இதுதான் சமூக நீதி சமத்துவ விடியல் ஆட்சி நடக்குது ....


Dharmavaan
ஜூலை 07, 2024 07:51

இந்த கேவலமான அரசுக்கு ஏன் ஒட்டு போடுகிறார்கள்


Ag Jaganath
ஜூலை 07, 2024 05:48

ஏண்டா விவசாயி ஓட்டுபோடும்போது என்ன சாப்பிட்டே


sridhar
ஜூலை 07, 2024 07:24

இதை விவசாயி கிட்ட மட்டும் தான் கேட்கணுமா , சட்ட சபை , லோக்சபா , உள்ளாட்சி எல்லா தேர்தல்களிலும் அனைத்து மக்களும் அப்படி என்ன சிறப்பு கண்டு திமுகவுக்கு வாக்களித்தார்கள் … மக்கள் துன்பங்களுக்கு மக்களே காரணம்.


முக்கிய வீடியோ