உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறி வரத்தில் மாற்றமில்லை தக்காளி விலை எகிறியது

காய்கறி வரத்தில் மாற்றமில்லை தக்காளி விலை எகிறியது

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து சராசரியாக இருந்த நிலையில், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து கடந்த வாரம் இருந்த அளவே இருந்தது. ஆனால், காய்கறிகள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.வியாபாரிகள் கூறியதாவது:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி பெட்டி (15 கிலோ) - 800 ரூபாய், தேங்காய் ஒன்று - 18, கத்தரிக்காய் கிலோ -- 65 , முருங்கைகாய் --- 125, வெண்டைக்காய் - 40, முள்ளங்கி - 28, வெள்ளரிக்காய் - 25, பூசணிக்காய் 15 - 20; அரசாணிக்காய் 15 - 20; பாகற்காய் - 80, புடலை - 35, சுரைக்காய் - 25, பீர்க்கங்காய் - 25, பீட்ரூட் - 60, அவரைக்காய் - 110, பச்சை மிளகாய் - 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த வாரத்தை விட தற்போது, தக்காளி (15 கிலோ) -- 350 ரூபாய், வெண்டைக்காய், புடலை, பீட்ரூட் ஆகியவை கிலோவுக்கு 5 ரூபாய், வெள்ளரி - 10, பாகற்காய் - 25, தேங்காய் மற்றும் சுரைக்காய் 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. பச்சை மிளகாய் - 10, அவரைக்காய் - 15, பீர்க்கன்காய் - 25 ரூபாய் விலை சரிந்துள்ளது.சென்ற வாரம் இருந்த அளவே காய்கறிகள் வரத்து உள்ளது. ஆனால், தக்காளி விலை அதிகரித்துள்ளது. வரும் வாரங்களில் காய்கறிகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை