உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இவங்க எப்பவுமே இப்படித்தான்! வாகனங்கள் நிறுத்துவதில் அலட்சியம்

இவங்க எப்பவுமே இப்படித்தான்! வாகனங்கள் நிறுத்துவதில் அலட்சியம்

பொள்ளாச்சி;'என்ன சொன்னாலும் நாங்க இப்படித்தான் டூவீலரை நிறுத்துவோம்' என்ற அலட்சியப் போக்கிற்கு மக்கள் மாறிவிட்டதால், போக்குவரத்து போலீசார் செய்வதறியாது திணறுகின்றனர்.பொள்ளாச்சி நகரில், வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், முக்கிய வழித்தடங்களிலேயே அமைந்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில், வாடிக்கையாளர்களின் டூவீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.இதனால், வாடிக்கையாளர்கள் தங்களது டூவீலர்களை ரோட்டின் அருகிலும், ரோட்டிலேயும் நிறுத்தி செல்வது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, நியூஸ்கீம் ரோடு, ராஜாமில் ரோடு, கடைவீதிகளில் இத்தகைய நிலையை தினமும் காண முடிகிறது.இதன் காரணமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்தும், டூவீலர்களை முறையாக நிறுத்தவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்துகின்றனர். இருப்பினும், 'என்ன சொன்னாலும் நாங்க கேட்க மாட்டோம்,' என்ற போக்கில் மக்கள் செயல்படுகின்றனர்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'நகரில் பிரதான வழித்தடங்களில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல தடை ஏற்படுகிறது. 'பார்க்கிங்' அல்லாத பகுதிகளில், டூவீலர் நிறுத்துவதற்கு தடை விதித்தாலும், மீண்டும் இதே நிலை தொடர்கிறது. போக்குவரத்து போலீசாரின் முறையான கண்காணிப்பு தேவை. அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ