மேலும் செய்திகள்
நுாலகத்தில் 'வை-பை' வசதி: கமிஷனர் தகவல்
28-Aug-2024
ஐ.டி.ஐ., பயிற்சி வகுப்பு அமைச்சர் துவக்கம்
20-Aug-2024
கோவை:கோவை ஆடிஸ் வீதியில் உள்ள நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. நுாலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கலெக்டர் கிராந்திகுமார், இந்த பயிற்சியை துவக்கி வைத்தார்.இம்மையத்தை தினமும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு படிப்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மையத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையிலும், கல்லுாரி படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாகவும், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் மற்றும் 'சோசியோ போடென்ட்ஸ்' எனும் தனியார் மையத்துடன் இணைந்து, இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியிருப்பதாவது:இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கம், நவீன காலத்தில் வேகமாக மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தனிநபர்கள், அவர்களது திறன்களை மேம்படுத்தி, சரியான வேலை வாய்ப்புகளை பெறவும், அவர்களது துறையில் நிபுணத்துவம் அடையவும் உதவுவதாகும். நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி பயிற்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி வகுப்பும், தனி தலைப்புகளில் 30 நாட்கள் நடக்கும். பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது. எனவே இப்பயிற்சி திட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.மேலம் விவரங்களுக்கு, 63858 37858 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சியில், சப் கலெக்டர் அங்கத்குமார் ஜெயின், உதவி கமிஷனர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சோசியோ போடென்ட்ஸ் நிறுவனர் சத்திய பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
28-Aug-2024
20-Aug-2024