உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுன்சிலர்களுக்கு ஊட்டியில் பயிற்சி

கவுன்சிலர்களுக்கு ஊட்டியில் பயிற்சி

கோவை:கோவை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, கடமை, பொறுப்பு மற்றும் அலுவலக நடைமுறையை விளக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு, மூன்று பிரிவாக ஊட்டியில் நடத்தப்படுகிறது; முதல்கட்ட பயிற்சி இன்று நடைபெறுகிறது.தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில், பயிற்சி வகுப்பு நடக்கிறது. பயிற்சியில் பங்கேற்க கோவை மாநகராட்சியில் உள்ள, 100 கவுன்சிலர்கள், ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊட்டியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடமை, பொறுப்பு மற்றும் அலுவலக நடைமுறைகள் கற்றுத்தரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி