உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.எம்.சி.எச்.,ல் மூட்டு பாதிப்புக்கு சிகிச்சை

கே.எம்.சி.எச்.,ல் மூட்டு பாதிப்புக்கு சிகிச்சை

'விளையாடும் போது ஏற்படும், மூட்டு மற்றும் ஜவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் கே.எம்.சி.எச்.,ல் உள்ளது,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எலும்பு முறிவு, மூட்டு மாற்று மற்றும் ஆர்த்தோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் பூபதி கிருஷ்ணன் கூறினார்.அவர் கூறியதாவது:கால்பந்து, கிரிக்கெட், கபடி, ஜல்லிக்கட்டு ஆகிய விளையாட்டுகளில் தான் பெரும்பாலும் காயங்கள் ஏற்படும். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு, பிற மூட்டுகளை விட, முழங்கால், தோள்பட்டைமூட்டுகளில் அதிக காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு, ஜவ்வுப்பகுதி அல்லது மூட்டின் உள்ளேயும், வெளியேயும் பிரச்னை ஏற்படலாம். எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.முதல்முறை தோள்பட்டை மூட்டு விலகினால், 70 - 80 சதவீதம் தானாகவே சரியாக வாய்ப்புள்ளது. அடிக்கடி இப்பிரச்னை ஏற்பட்டால், ஜவ்வுகளில் பிரச்னை இருக்கலாம்; உரிய சிகிச்சை பெற வேண்டும்.எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வாயிலாக, பாதிப்பை கண்டறிந்து, நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கிழிசல் அதிகமாக இருந்தால், தோள்பட்டை அருகே உள்ள எலும்பை நகர்த்தி வைத்து, விலகாத வகையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்; மூட்டு தேய்மானத்தை தவிர்க்கலாம்.40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நுண்துளை சிகிச்சைக்கு முன், மேற்கொள்ளப்படும் மூட்டு சீரமைப்பு பரிசோதனையில், பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், மூட்டு பிரிசர்வேஷன் மற்றும் மூட்டு ரீஅலைன்மென்ட் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதன்பின், தேவைப்பட்டால் மட்டும் தசைநார் மற்றும் ஜவ்வுகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.கே.எம்.சி.எச்.,ல் இதற்கான அனைத்து வசதிகளும், நவீன கருவிகளும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ