மேலும் செய்திகள்
பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவ முகாம்
08-Feb-2025
கோவை; கோவை, வேளாண் பல்கலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பண்ணைத் தொழிலாளர்களுக்கான காச நோய் பரிசோதனை முகாம் நடந்தது.தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், மாவட்ட காசநோய் ஒழிப்பு மையம் சார்பில் நடந்த முகாமை, முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலக டீன் சுரேஷ்குமார், பயிர் மேலாண்மை இயக்கக இயக்குநர் கலாராணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாமில், பண்ணைத் தொழிலாளர்களுக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவு, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.உயர் சிகிச்சை தேவைப்படுவோர், பி.என்.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். பண்ணை மகளிருக்கு கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம், ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நடந்தது.
08-Feb-2025