டி.வி.எஸ்., ஜூபிட்டர் 100 புதிய ஸ்கூட்டர் அறிமுகம்
கோவை;டி.வி.எஸ்., ஜூபிட்டர் 100 புதிய ஸ்கூட்டர் அறிமுக விழா கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.டி.வி.எஸ்., நிறுவனத்தின் இணை துணை தலைவர்(கம்யூட்டர் மார்கெட்டிங்) பினாய் ஆன்டனி கூறியதாவது:இரு சக்கர வாகன சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில், ஸ்கூட்டர் சந்தையின் வளர்ச்சி, 8 சதவீதமாக உள்ளது. இதில், டி.வி.எஸ்., ஸ்கூட்டர் சந்தை வளர்ச்சி, 12 சதவீதமாக உள்ளது. இன்று ஸ்கூட்டர்களை விரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, 2013 ம் ஆண்டு, டி.வி.எஸ்., ஜூபிட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் பல்வேறு மாடல்களில், ஜூபிட்டர் வெளிவந்துள்ளது. தற்போது புதிய டி.வி.எஸ்., ஜூபிட்டர் 110 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் பல்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு விரும்பக்கூடியதாக உள்ளது. இன்பினிட்டி லைட் பார், பிரிமியம் பியானோ பிளாக் கான்ட்ராஸ்ட் பேனல்கள், மற்றும் நவீன சிசல்ட் கம்பீர தோற்றம் உள்ளிட்டவை இதன் தனி அம்சங்கள். குறைவான எடையுள்ள இன்ஜின், ஐ.ஜி.ஓ., அசிட் உடன் இன்ஜின் உள்ளது. இதனால், தேவைக்கேற்ப வாகனத்தின் வேகத்தை கூடுதல் எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது. இரு ஹெல்மெட்களை வைக்க வசதி, முன்பகுதியில் எரிபொருள் நிரப்பும் வசதி, ரோட்டோ பெடல் டிஸ்க் பிரேக்குகள், திடீரென பிரேக் செய்வதை எச்சரிக்கும் எமர்ஜென்சி பிரேக் வார்னிங் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள். பாடிபேலன்ஸ் 2.0, மிக நீண்ட இருக்கை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடியது. இந்த ஸ்கூட்டர் இன்ஜின், 113.3 சி.சி., சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் செயல்திறனை கொண்டுள்ளது. ஜூபிட்டர் 110, எக்ஸ் ஷோரூம் விலை, ரூ.79 ஆயிரமாக(சென்னை) உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக, டி.வி.எஸ்., நிறுவனத்தின் இணை துணை தலைவர்(கம்யூட்டர் மார்கெட்டிங்) பினாய் ஆன்டனி, தமிழக மண்டல விற்பனை மேலாளர் பத்மநாபன் ஆகியோர் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தினர்.