பைக் திருடிய இருவர் கைது
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார், 25. இவர், கிணத்துக்கடவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது பைக் கடந்த 2025 அக்டோபர் மாதம் திருடுபோனது. இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து பைக் திருடிய நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிணத்துக்கடவு போலீசார், கோதவாடி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், 22, மற்றும் நவநீதகிருஷ்ணன், 19, ஆகிய இருவரையும் நிறுத்தி விசாரணை செய்தனர். இதில், அவர்கள் வந்தது திருட்டு பைக் என்பது உறுதியானது. இதையடுத்து, பைக்கை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.