உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒருவழிப்பாதையில் சென்ற 4 பைக்குகள் மீது கார் மோதல் இருவர் பலி; 4 பேர் படுகாயம்

ஒருவழிப்பாதையில் சென்ற 4 பைக்குகள் மீது கார் மோதல் இருவர் பலி; 4 பேர் படுகாயம்

கிணத்துக்கடவு: திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் பாலாஜி, 28; தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்கிறார். இவர், தன் உறவினரை கோவை விமான நிலையத்தில் இறக்கி விட்டு, காரில் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்தார்.கிணத்துக்கடவு, தாமரைக்குளம் அருகே வந்தபோது, ரோட்டில் எதிர்திசையில், மாசநாயக்கன்புதுாரைச் சேர்ந்த குமார், 51, அவரது மனைவி மரகதம், 45, ஆகியோர் ஒரு பைக்கிலும், சதீஷ்குமார், 30, தனி பைக்கிலும், பட்டணத்தைச் சேர்ந்த சம்பத்குமார், 41, பழனிசாமி, 51 ஆகியோர் ஒரு பைக்கிலும், தாமரைக்குளத்தை சேர்ந்த திருமூர்த்தி, 51, மற்றொரு பைக்கிலும் வந்தனர். நான்கு பைக்குகள், 'ஒன்வே'யில் வந்ததால் காரில் வந்த பாலாஜி தடுமாற்றமடைந்து, பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதினார். இதில், பைக்கில் வந்த அனைவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். நான்கு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அனைவரும் தாமரைக்குளம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிக்கு செல்ல வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காரை ஓட்டிய பாலாஜி சிறு காயங்களுடன் தப்பினார். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
செப் 01, 2024 13:21

இந்த ரோட்டில் விபத்து நடக்கவில்லை என்றால் அது ஆச்சரியம் தான்.... இந்த வாரத்தில் இரண்டு வட இந்திய மாணவர்கள் பலி, தாமரைகுளம் நரிக்குறவர் காலனி முன் ஆம்னி பஸ் மோதல் பற்றிய தகவல் இல்லை.... காரணம் வேகம் மட்டும் அல்ல கவன சிதறல்.


அப்புசாமி
செப் 01, 2024 07:25

இந்தியாவில் நேர் வழியில் செல்ல வசதிகள் குறைவு. இந்த நாலுபேரும் சுத்திப் போறதுன்பா ஒரு 10, 15 கிலோமீட்டர் போக வேண்டியிருக்கும். நம்ம அரசு தத்திகள் இதெயெல்லாம் யோசிக்காம நாலு வழி, எட்டு வழி சாலைகள் போட்டுத்தள்ளி மெடல் குத்திக்கும். கேட்டா நாமதான் வல்லரசுன்னு பெருமிதப்படும். ஒவ்வொரு தடவையும் காரில் NH 45 ல போகும்போது கிராமங்களின் குறுக்கே டூ வீலரில் நுழைபவர்களைப் பாத்தா குடல் கலங்கும். பேரி கார்டுங்கற பேரில் இத்துனூண்டு இடம் வெச்சு அசுர வேகத்தில் வரும் கார், பஸ்களை கன்றோல் செய்யும் போலுஸ் தத்திகள் இன்னொரு ரகம். அடுத்ததாக தண்ணி, கஞ்சா அடிச்சிட்டு போதையில் வண்டி ஓட்டும் தத்திகள். உயிரைக் கையில் புடிச்சிக்கிட்டுதான் சாலைகளில் போக வேண்டியிருக்கு.


அப்புசாமி
செப் 01, 2024 06:56

கண்டவனுக்கெல்லாம் பைக், லைசன்ஸ் குடுத்து சாலை விதிகள் தெரியாமல் ஓட்டுறாங்க. போய்ச்சேரட்டும்.


புதிய வீடியோ