/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுப்படியாகாத விலை மூன்று மாத உழைப்பு வீண்; வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் சோகம்
கட்டுப்படியாகாத விலை மூன்று மாத உழைப்பு வீண்; வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் சோகம்
அன்னுார்: அன்னுார் வட்டாரம் நாச்சிபாளையம் விவசாயிகள் கூறியதாவது: சிறிய வெங்காய விதை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு வாங்கி விதைப்பு செய்தோம். தொழிலாளர்களுக்கு தினக்கூலி 500 ரூபாய் வழங்கப்பட்டது. வியாபாரிகள் ஒரு கிலோவுக்கு அதிகபட்சம் 25 ரூபாய்க்கு மட்டுமே விலைக்கு கேட்கின்றனர். சிறிய வெங்காயத்திற்கு செலவு மட்டும் ஒரு கிலோவுக்கு, 25 ரூபாய் ஆகி உள்ளது. மூன்று மாத உழைப்புக்கு ஒரு ரூபாய் கூட பயனில்லை. இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்கும் அடிப்படை கட்டமைப்பு வசதியும் இப்பகுதியில் இல்லை. இதனால் அசல் விலைக்கு விற்கின்றோம். 90 நாள் உழைப்பு வீணாகி விட்டது. இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.