உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ் மீது வேன் மோதல்; டிரைவர், கண்டக்டர் காயம்

அரசு பஸ் மீது வேன் மோதல்; டிரைவர், கண்டக்டர் காயம்

வால்பாறை; அரசு பஸ் மீது கூரியர் வேன் மோதிய விபத்தில், டிரைவர், கண்டக்டர் லோசான காயத்துடன் தப்பினர்.ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியிலிருந்து, நேற்றுமுன்தினம் காலை வால்பாறை வழியாக பொள்ளாச்சிக்கு அரசு பஸ் (டிஎன் 38 என் 3173) இயக்கப்பட்டது.வால்பாறையிலிருந்து காலை, 6:40 மணிக்கு புறப்பட்ட பஸ், வாட்டர்பால்ஸ் அருகே சென்ற போது, பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி வந்த கூரியர் பார்சல் வேன் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமானது. பஸ்சில் பயணம் செய்த பயணியர் யாருக்கும் காயமில்லை.ஆனால், பஸ் டிரைவர் கருப்பையா, கண்டக்டர் முத்துபாண்டி ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டு, எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து காடம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'விபத்துக்குள்ளான கூரியர் வேன், நாள் தோறும் வால்பாறைக்கு வந்து செல்கிறது. டிரைவரின் கவனக்குறைவாலும், அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாலும், விபத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் அதிவேகமாக வரும் வாகனங்களை கண்டறிந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !