உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

அன்னுார்: அன்னுார் தாலுகாவில், 27 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அன்னுார் தாலுகாவில், மொத்தம் 30 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களில், 27 பேரை பணியிட மாற்றம் செய்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., வினோத்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவில், அன்னுார் தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களில் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்கள், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வடக்கு தாலுகாவுக்கும், ஒரு சிலர், அன்னுார் தாலுகாவில் வேறு கிராமங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை வடக்கு மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவிலிருந்து சிலர், அன்னுார் தாலுகாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆர்.டி.ஓ., உத்தரவை அடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ