உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிற்பயிற்சி நிலையத்துக்கு பயிற்றுனர் பணிக்கு ஆள் தேவை

தொழிற்பயிற்சி நிலையத்துக்கு பயிற்றுனர் பணிக்கு ஆள் தேவை

கோவை:கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுனர் பதவிக்கு, 28 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள ஒரு பணியிடத்துக்கு பொதுப்போட்டி, முன்னுரிமை இல்லாத இன சுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுகிறது.ஐ.டி.ஐ., தேசிய தொழிற்சான்றிதழுடன் மூன்று ஆண்டு முன் அனுபவம், தொழிற் பழகுநர் சான்றிதழுடன் அதே துறையில் இரண்டு ஆண்டு அனுபவம் அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் மூன்றாண்டு பட்டயப் படிப்புடன் அதே துறையில் இரண்டு ஆண்டு முன் அனுபவம் அலலது ஓராண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தை, செப்., 16ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), ஜி.என்.மில்ஸ் அஞ்சல், கோவை - 29 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, கலெக்டர் கிாாந்திகுமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை