மேலும் செய்திகள்
நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் விடுதி துவக்கம்
18-Aug-2024
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா, நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமான சாமண்ணா நீரேற்று நிலையத்தில், மூன்று குடிநீர் திட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதை அடுத்து வருகிற, 18, 19, 20 ஆகிய மூன்று தேதிகளில் (புதன், வியாழன், வெள்ளி) மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.குடிநீரை காய்ச்சி குடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
18-Aug-2024