உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்கணும்!

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்கணும்!

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எம்.எல்.ஏ., தாமோதரன் தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் அமைக்கப்பட்டது. மற்றும் இதற்கான ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், கட்சி பணி செய்தவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்க, அந்தந்த கிளைகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.எம்.எல்.ஏ., பேசுகையில், ''புதிதாக ஒன்றியம் துவங்கப்பட்டுள்ளது. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். புதிதாக கட்சியில் இணைபவர்கள் மற்றும் புதிதாக பொறுப்பு பெற்றவர்களுக்கு விரைவில் உறுப்பினர் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.தமிழகத்தில், கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு குற்ற செயல்களில் தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர். இதற்கெல்லாம் தீர்வு காண, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை