உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்  ;சத்குருவின் புதிய நுால் என்ன சொல்கிறது?

கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்  ;சத்குருவின் புதிய நுால் என்ன சொல்கிறது?

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற, புதிய தமிழ் புத்தகத்தின் வெளியீட்டு விழா, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.2021ம் ஆண்டு ஆங்கிலத்தில் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை, பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று, சாதனை படைத்துள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில், புத்தக வாசிப்பாளர்களால் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, தமிழில் அறிமுகம் செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ''நான் என்னுடைய வாழ்நாளில், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ, மற்றவர்களுக்கு துன்பம் தர மாட்டேன். துன்பப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்ற பண்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.அன்னபூர்ணா குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், ''சத்குரு எத்தனை நாடுகள் சென்றாலும், அவர் கோவையில் இருப்பது, கோவை மக்களுக்கான பெரும் ஆசி,'' என்றார். பேச்சாளர் சுமதி, ''என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு என்பதுதான் இந்த புத்தகம். நாம் ஒரு செயலை செய்கிறோம். அது வெற்றியா, தோல்வியா, பிறருக்கு அது பிடிக்குமா, பிடிக்காதா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி, நம் முழு திறனையும் வெளிப்படுத்துவது ஒன்றே நோக்கமாய் செயல்பட வேண்டும். இதுபோன்ற நற்கருத்துகளை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது,'' என்றார்.மரபின் மைந்தன் முத்தையா பேசுகையில், ''சூழலை நாம் எதிர்கொள்ளும் விதம் தான், துன்பத்துக்கு காரணமாக அமைகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை