ஓரியன் டிராபி கூடைப்பந்து யார், யாருக்கு வெற்றி?
கோவை, ;'ஓரியன் டிராபி' கூடைப்பந்து போட்டி, 'மென்ஸ்' பிரிவில் ஜெயபாரதி அணி முதலிடமும், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணி இரண்டாம் இடமும் பிடித்தன.நேரு ஸ்டேடியம் அருகே, மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில், 15வது 'ஓரியன் டிராபி' கூடைப்பந்து போட்டி கடந்த, 16 முதல், 23ம் தேதி வரை நடந்தது.ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடந்த இப்போட்டியில், மினி பாய்ஸ் பிரிவில், 16 அணிகள், மினி கேர்ல்ஸ் பிரிவில், 8 அணிகள், மென்ஸ் பரிவில், 27 அணிகள் பங்கேற்றன.'மினி பாய்ஸ்' இறுதிப்போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., 'ஏ' அணி, 85 -56 என்ற புள்ளிகளில் விஸ்வதீப்தி அணியை வென்று, முதல் பரிசை தட்டியது. 'மினி கேர்ள்ஸ்' பிரிவில், அல்வெர்னியா பள்ளி அணி, 75-28 என்ற புள்ளிகளில், பாரதி அணியை வென்று முதல் பரிசை தட்டியது.மென்ஸ் பிரிவு முதல் அரையிறுதி போட்டியில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணி, 81-67 என்ற புள்ளிகளில் குமரகுரு அணியையும், இரண்டாம் அரையிறுதியில் ஜெயபாரதி அணி, 64-46 என்ற புள்ளிகளில், பாரதி அணியையும் வென்றது. இறுதிப்போட்டியில் ஜெயபாரதி அணி, 102-67 என்ற புள்ளி கணக்கில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்., அணியை வென்று, முதலிடம் பிடித்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு, போட்டி ஒருங்கிணைப்பு செயலாளர்கள் கிருஷ்ணன், சதீஸ் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.