-குடிமங்கலத்தில் பரவலாக மழை
குடிமங்கலம் ;குடிமங்கலம் வட்டாரத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரம் பெதப்பம்பட்டி பகுதியில் கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று அடிவள்ளி கிராமத்தில், ஆலங்கட்டி மழை பெய்தது.அம்மாபட்டி கிராமத்தில் தென்னை மரத்தில் இடி தாக்கியது. இதில் அம்மரம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை வெப்பத்தை தணிக்க பரவலாக பெய்து வரும் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.