உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த பெண்

ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த பெண்

கோவை; கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்த மருதன்; மனைவி மஞ்சு, 38. இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர்.நேற்று பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக, தம்பதி அட்டப்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வந்தனர். பஸ் கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் வந்த போது, மஞ்சு திடீரென பஸ்சில் இருந்து கீழே குதித்தார்.இதில் பலத்த காயமடைந்த அவரை, பொது மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ