உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த மகளிர் தின விழா

ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த மகளிர் தின விழா

கோவை; கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், தாமஸ் கிளப் வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் மகளிர் தின விழா நடந்தது.மகளிர் துணை குழு அமைப்பாளர் சாந்தாமணி தலைமை வகித்தார். சாரதாமணி தேவி வரவேற்றார். மாவட்ட தலைவர் மதன், துவக்க உரையாற்றினார். யோகா பேராசிரியர் சுப்ரமணியன், 'யோகமும் பெண்ணின் பெருமையும்' என்கிற தலைப்பில் பேசினார். 'பெண்களும் கண்களும்' என்கிற தலைப்பில் கண் டாக்டர் அனுஷா சிறப்புரையாற்றினார்.மாநில துணை தலைவர் அரங்கநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் மைதிலி உள்ளிட்டோர், கருத்துரை வழங்கினர். மாவட்ட இணை செயலாளர் ஜானகி நன்றி கூறினார். இதன் ஒரு பகுதியாக, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ