உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷாவில் யக் ஷா கலை திருவிழா கோலாகல துவக்கம்

ஈஷாவில் யக் ஷா கலை திருவிழா கோலாகல துவக்கம்

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, யக் ஷா எனும் பாரம்பரிய கலைத் திருவிழா கோலாகலமாக துவங்கியது.கோவை ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழா, 26ம் தேதி பிரமாண்டமாக நடக்க உள்ளது.இதையொட்டி, பிப்., 23 முதல் 25ம் தேதி வரை, மூன்று நாட்கள், 'யக் ஷா எனும் பாரம்பரிய கலைத் திருவிழா நடக்கிறது. ஈஷா யோகா மைய வளாகத்தின் சூர்ய குண்ட மண்டபம் முன்பு நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். முதல் நாள் நிகழ்ச்சியில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சிக்கல் குரு சரணின் இசைக்கச்சேரி நடந்தது. இதில், வயலின் கலைஞர் சஞ்சீவ், மிருதங்க இசைக்கலைஞர் பரத்வாஜ் ஆகியோரும், தங்களின் இசை ஆற்றலை வெளிப்படுத்தினர். இரண்டாம் நாளான இன்று, தேசிய விருது பெற்ற ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் ராகுல் தேஷ் பாண்டேவின் இசை நிகழ்ச்சியும், வரும், 25ம் தேதி, மீனாட்சி சீனிவாசனின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை