மேலும் செய்திகள்
'செல்வமகள்' சேமிப்பு திட்டத்திற்கு சிறப்பு மேளா
21-Feb-2025
பொள்ளாச்சி: தபால் அலுவலகங்களில், விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் அறிக்கை:பணிபுரியும் இடம், வீடுகள், பயணங்களின் போது எதிர்பாராத விபத்து ஏற்படும். விபத்தில் சிக்கியவரின் குடும்பமே நிலை குலைந்து போய் விடுகிறது. வருவாய் இழப்பு, கடன், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன.இதனை கருத்தில் கொண்டு, எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும், பயனளிக்கக் கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு தபால் துறை மற்றும் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' இணைந்து துவங்கியுள்ளன.அவ்வகையில், இந்த விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. வரும் 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. குறிப்பாக, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் வால்பாறை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களில், இதற்கான பதிவை செய்து கொள்ளலாம்.இந்த திட்டத்தில், 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஆதார் எண், மொபைல் போன் எண், வாரிசுதாரர் (நாமினி) விபரங்களுடன் அணுகலாம்.அதன்படி, 320 ரூபாய்க்கு 5 லட்சம்; 559 ரூபாய்க்கு 10 லட்சம்; 799 ரூபாய்க்கு 15 லட்சம் என்ற வகைகளில், விபத்து பிரீமியம் தொகை செலுத்தி, இந்த திட்டத்தில் இணையலாம்.மேலும் விபரங்களுக்கு, தலைமை தபால் அலுவலகம், அனைத்து தபால் அலுவலகங்கள் அல்லது திருப்பூர், கோவை கிளை 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி'களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
21-Feb-2025