உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் இருந்தபடி குழந்தையையும் கவனிச்சுக்கலாம்; பணமும் சம்பாதிக்கலாம்!

வீட்டில் இருந்தபடி குழந்தையையும் கவனிச்சுக்கலாம்; பணமும் சம்பாதிக்கலாம்!

என்னதான் படித்து இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு, பல பெண்கள் வேலைக்கு செல்வதில் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளை கூட இருந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, பலர் வேலைக்கு செல்வதில்லை. அதே சமயம், பொருளாதார தேவைகளில் பிறரை சார்ந்து இருப்பதை விரும்புவதில்லை. 'குழந்தையையும் பார்த்துக்கொள்ளலாம்; வேலை பார்த்து பணமும் சம்பாதிக்கலாம்' என்ற வசதி இருந்தால் எப்படி இருக்கும்?பேக்கிங் தொழில்தான் அதற்கேற்றது என்கிறார், பேக்கிங் பயிற்சியாளர் ரித்திமா மாத்துார். லட்சுமி மில்ஸ் சாலையில் உள்ள ஒரு அரங்கில் நடந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்ற இவரிடம் பேச்சுக்கொடுத்தோம்...''பேக்கிங் தற்போது ஐ.டி., துறை அளவிற்கு வருமானத்தை ஈட்டித்தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. விலை நிர்ணயம் செய்வது, பிறரை விட இவர்களுக்கு எளிது. கேக் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களுக்கான விலையை சேர்த்து, அதில், சிறு விலையை கூட்டி லாபமாக விற்கலாம்,'' என்கிறார் இவர்.புதிய வகை கேக் தயாரிப்பில் ஏற்படும் பிரச்னைக்கான தீர்வு, சந்தை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், மொபைல் போன் பயன்படுத்தி போட்டோ ஷீட் எடுத்தல், சோசியல் மீடியா புரோமோஷன் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பல்வேறு வகை கேக் தயாரித்து, வல்லுநர்கள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ