உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யுவா கோப்பை கால்பந்து போட்டி யுவபாரதி பப்ளிக் பள்ளி வெற்றி

யுவா கோப்பை கால்பந்து போட்டி யுவபாரதி பப்ளிக் பள்ளி வெற்றி

பெ.நா.பாளையம்,; பெரியநாயக்கன்பாளையம் அருகே நடந்த, யுவா கோப்பைக்கான கால்பந்து போட்டியில், யுவபாரதி பப்ளிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன் பாளையத்தில் உள்ள யுவா பப்ளிக் பள்ளியில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடந்தது.இதில், கோவையில் உள்ள சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.சி., பள்ளிகளை சார்ந்த மாணவியர் பிரிவில், 14 அணியினரும், மாணவர்கள் பிரிவில், 20 அணியினரும் கலந்து கொண்டனர்.பெண்களுக்கான போட்டியில், ஸ்பிரிங் மவுண்ட் பப்ளிக் பள்ளி முதல் இடத்தையும், எல்லோ டிரெயின் சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றது.இரண்டாம் நாள் நடந்த ஆண்களுக்கான போட்டியில், யுவபாரதி பப்ளிக் பள்ளி முதல் இடத்தையும், சமஸ்கார அகாடமி இரண்டாம் இடத்தையும் பெற்றது.வெற்றி பெற்ற பெண்கள் அணிகளுக்கு, பள்ளி அறங்காவலர்கள் ஜெகதீசன் மற்றும் கோகிலா ஆகியோர் பதக்கங்களையும், யுவா கோப்பையும் வழங்கினர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு, பதக்கங்கள் மற்றும் யுவா கோப்பையை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, யுவா பப்ளிக் பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா மற்றும் அறங்காவலர் திருமூர்த்தி ஆகியோர் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர்கள் முகேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை