மேலும் செய்திகள்
என்.சி.சி., பிரிவு துவக்க விழா
02-Oct-2024
சூலுார்: சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக, தேசிய மாணவர் படையின், 10 நாள் பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. சிறப்பு முகாம் மற்றும் என்.சி.சி., யின் குடியரசு தின அணிவகுப்பு தேர்வு முகாம் என, இரு பிரிவுகளில் நடந்த இம்முகாமில், லெப்டினன்ட் கர்னல் ஒய்னம் தலைமையில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.குடியரசு தின முகாமுக்கான சிறந்த மாணவர் தேர்வு, துப்பாக்கி சுடுதல், ஆயுத பயிற்சி, அணிவகுப்பு பயிற்சி, என்.சி.சி., வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஊட்டி, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி என்.சி.சி., மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் அனிர்பன் பவுமிக், சுபேதார் மேஜர் பாண்டியன் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். கோவை குழும தேசிய மாணவர் படை கமாண்டிங் அதிகாரி கர்னல் சிவ்ராவ் முகாமை பார்வையிட்டு, மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். ஆர்.வி.எஸ்., கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் தீபக் ரிஷாந்த் முகாமை ஒருங்கிணைத்தார்.
02-Oct-2024