உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100 ரேஷன் கடைகளில் 100 நாள் போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு

100 ரேஷன் கடைகளில் 100 நாள் போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு

பல்லடம், : ''ரேஷனில், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, நுாறு ரேஷன் கடைகள் முன்பு, 100 நாள் போராட்டம் நடத்தப்படும்'' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, அதன் செயல் தலைவர் வெற்றி அறிக்கை:தேங்காய் எண்ணெயை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாமாயிலை தடை செய்ய வேண்டும்.இதற்காக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினோம். அதன் பயனாக, சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதால், தற்போது, எண்ணெய் வித்துகள் விலை உயர்ந்ததுடன், தேங்காய் விலையும் தற்போது ஏறுமுகத்தில் உள்ளது.நான்கு மாவட்டங்களில், பரிசோதனை முயற்சியாக, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வினியோகிப்பதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இன்று வரை இந்த அறிவிப்பு அமல்படுத்தப்படவில்லை. எனவே, கள்ளுக்கான தடையை நீக்கி, பாமாயிலை தடை செய்து, ரேஷனில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 1 முதல், நுாறு ரேஷன் கடைகள் முன், 100 நாட்கள் தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ