உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100 கி.புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

100 கி.புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே வீட்டில், 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஒதுக்கி வைத்திருந்த நபரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், எஸ்.ஐ., நமச்சிவாயம் ஆகியோர் நரசிம்மநாயக்கன்பாளையம் தொப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இந்த வீட்டை சுற்றி வளைத்து, அதிரடி சோதனை நடத்தினர். வீட்டுக்குள், 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அதை கைப்பற்றி பதுக்கி வைத்த அய்யப்பன்,22, நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ