உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனநலம் பாதித்த இளைஞர் கொலையில் 11 பேர் கைது

மனநலம் பாதித்த இளைஞர் கொலையில் 11 பேர் கைது

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சி முல்லை நகரில், 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் மனநல காப்பகத்தில், கோவை சோமனுாரை சேர்ந்த ரவிக்குமாரின் மகன் வருண்காந்த், 22, காப்பக நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் அடித்து கொலை செய்து, நடுப்புணி பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.இதில் தொடர்புடைய காப்பக நிர்வாகி கிரிராம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான காப்பக நிர்வாகி கவிதா, 53, அவரது கணவர் லட்சுமணன், அவரது மகள்கள் சுருதி, 23, ஸ்ரேயா, 20, ஜோதிநகரை சேர்ந்த ஷாஜி, 27, ஆகியோரை போலீசார், திருவனந்தபுரத்தில் நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:காப்பகத்தில் இருந்து மே 9ல் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, தனியாக இருந்த வருண்காந்த், சத்தமிட்டதால் கோபமடைந்த நிர்வாகிகள், ஊழியர்கள் அவரைதாக்கினர். 12ம் தேதி அணிந்திருந்த உடையிலேயே, அவர் இயற்கை உபாதை கழித்ததை ஊழியர்கள் கூறியதையடுத்து, நிர்வாகியான மனநல ஆலோசகர் கவிதா, வருண்காந்தை அடித்துள்ளார்.அதன் பின், அவரை மசாஜ் அறைக்கு அழைத்து சென்று அடித்து, கம்பத்தில் கட்டி வைத்து, அரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடி துாவியும், பச்சை மிளகாயை வாயில் திணித்தும், கொடூரமாக தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. அதில், அவர் இறந்தது தெரிந்ததும், சடலத்தை தோட்டத்தில் புதைத்து விட்டு, அவரை காணவில்லை என, நிர்வாகிகள், ஊழியர்கள் நாடகமாடினர். இவ்வழக்கில் தொடர்புடைய, 11 பேர் மீதும் கொலை, ஆயுதங்களால் தாக்குதல், பிரேதத்தை மறைத்தல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய இரு கார்கள், சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை