உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் பரிசோதனை முகாம்: 114 பேர் பங்கேற்பு

கண் பரிசோதனை முகாம்: 114 பேர் பங்கேற்பு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமில் கண்புரை, கண்நீர் அழுத்த நோய் மற்றும் சர்க்கரை நோயினால் கண் விழித்திரை பாதிப்பு மற்றும் இதர கண் சார்ந்த பிரச்னைகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில், 114 பயனாளர்கள் பங்கேற்றனர். இதில், 56 நபர்களுக்கு கண் குறைபாடுகள் கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்கு, இருவர் தேர்வு செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி