உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறிச்சி அரவான் கோவில் திருவிழா நடத்த 12 நிபந்தனை

குறிச்சி அரவான் கோவில் திருவிழா நடத்த 12 நிபந்தனை

கோவை: குறிச்சி அரவான் கோவில் திருவிழா, தாசில்தார் முன்னிலையில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை, குறிச்சியில் பழமை வாய்ந்த அரவான்- பொம்மி அம்மன் கோவில் உள்ளது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி, குறிச்சி அனைத்து சமுதாய ஒருங்கிணைந்த பெரிய தனக்காரர் கூட்டமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஐகோர்ட், கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையில் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாடு ஏற்பட்டால், விழாவை இணக்கமாக நடத்தலாம். கோட்டாட்சியர் முடிவை ஏற்க விரும்பாத பட்சத்தில், திருவிழாவை மதுக்கரை தாசில்தார் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கோட்டாட்சியர் மாருதிபிரியா தலைமையில் இரண்டு கட்டமாக பேச்சுவாரத்தை நடத்தப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், ஹந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், இரு தரப்பினர் பங்கேற்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில், இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படாத காரணத்தால், ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், மதுக்கரை தாசில்தார் தலைமையில், ஹிந்து சமய அறநிலைய துறையினர் முன்னிலையில், 12 நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவில் திருவிழாவில் நிபந்தனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், திருவிழா நடைபெறும் நாட்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ