மேலும் செய்திகள்
எல்.எண்டத்துாரில் மருத்துவ முகாம்
13-Jul-2025
கோவை; சேவா பாரதி தென் தமிழ்நாடு சார்பில் நடந்த, பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாமில், 125 பேர் பயன்பெற்றனர். சேவா பாரதி தென் தமிழ்நாடு சார்பில் ராமநாதபுரம் அருகே, 80 அடி ரோட்டில் உள்ள திருமதி சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாம் நடந்தது. இதில், மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம், கண் நலம் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை நல அறுவை சிகிச்சை மருத்துவம் தொடர்பாக, பி.எஸ்.ஜி., மருத்துவமனை நிபுணர்கள் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். 125 பேர் பயனடைந்தனர். சிலர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
13-Jul-2025