உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்தூரில் 132 நாய்களுக்கு தடுப்பூசி

தொண்டாமுத்தூரில் 132 நாய்களுக்கு தடுப்பூசி

தொண்டாமுத்தூர்: உலக ரேபிஸ் தினத்தையொட்டி, கால்நடை மருந்தகங்களில் நேற்று வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, வேடபட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை,, நரசீபுரம் ஆகிய 6 கால்நடை மருந்தகங்களில், நேற்று காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 12 தெரு நாய்கள் உட்பட வீட்டில் வளர்க்கும் 120 நாய்கள் என 132 நாய்களுக்கு, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. அதோடு ரேபிஸ் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !