மேலும் செய்திகள்
'பைனான்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கணும்'
24-Oct-2024
கோவை; தவறான ஆபரேஷனால் பாதித்த பெண்ணுக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது. கோவை கிணத்துக்கடவு, அவ்வையார் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி லட்சுமிக்கு,45, வயிற்றுவலி ஏற்பட்டதால், சாய்பாபாகாலனியில் உள்ள ஸ்ரீஹரி மருத்துவமனையில், 2019, நவ., 26 ல் சேர்க்கப்பட்டார். ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது கர்ப்பப்பை பலவீனமாக இருந்ததால், அதை அகற்றுவதற்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி, லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக, 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினார். அறுவை சிகிச்சைக்கு பிறகு, தொடர்ந்து வலி ஏற்பட்டதோடு, சிறுநீர் நிற்காமல் சென்றது. அந்த பிரச்னையை சரி செய்யாமல் 'டிஸ்சார்ஜ்' செய்தனர். மறுபடியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் 'அட்மிட்'ஆகி சிகிச்சை பெற்றும் சிறுநீர் நிற்கவில்லை. இதையடுத்து, மற்றொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் தவறான ஆபரேஷனால் சிறுநீர் குழாய் சேதமடைந்து, சிறுநீர் வெளியேறியது தெரிய வந்தது. அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட லட்சுமி, தனியார் மருத்துவமனை இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால், மனுதாரருக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். வழக்கு செலவு , 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
24-Oct-2024