உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 152 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்; 26 விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ்

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 152 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்; 26 விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ்

கோவை; கோவையில் செயற்கை முறையில் எத்திலின் திரவம் தெளித்தும், எத்திலின் பவுடர் மாம்பழ பெட்டிகளில் வைத்தும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 152 கிலோ மாம்பழங்கள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகள் படி, மாம்பழங்கள் எத்திலின் திரவம் தெளித்தும், எத்திலின் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தி பழுக்கவைக்கூடாது. இதுகுறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள உணவுபாதுகாப்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் கடந்த, ஜனவரி 1ம் தேதி முதலே மாம்பழங்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் படி, 746 இடங்களில் கடந்த, 25ம் தேதி வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.இதுகுறித்து, மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில்,'' கடந்த, ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 25 வரை 746 இடங்களில் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 26 விற்பனையகங்களில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 152 கிலோ செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. விதிமுறை மீறி செயல்பட்ட, 26 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு; மொத்தமாக 52 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !