உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு பொறியியல் கல்லுாரியில் 15வது பட்டமளிப்பு விழா

நேரு பொறியியல் கல்லுாரியில் 15வது பட்டமளிப்பு விழா

கோவை,; திருமலையம்பாளையம், நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் 15வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக புனே, டி.ஆர்.டி.ஓ., இயக்குனர் அங்கதி ராஜூ கலந்து கொண்டு, இளநிலை, முதுநிலை என, 290 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். சிறந்த பட்டதாரிகள் நேரு கல்வி குழுமத்தின் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் வணிக அமைப்பு பட்டத்தில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற ஹரிகிருஷ்ணனுக்கு, சிறப்பு விருந்தினர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். செயலாளர் டாக்டர் கிருஷ்ணக்குமார் ரொக்கப்பரிசளித்தார்கல்லுாரியின் முதல்வர் மணியரசன் 2024 -- 25-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், கல்லுாரியின், கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகளில் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.நேரு கல்வி குழுமங்களின் கல்வி, நிர்வாகத்தின் செயல் இயக்குனர் நாகராஜா, தேர்வு கட்டுப்பட்டாளர் உதயசூரியன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை