மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்:கணவர் மீது 'போக்சோ'
01-Dec-2025
சூலூர்: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, உறவினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவில் பாளையத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, எட்டாவது படித்து விட்டு, பலூன் விற்று வந்துள்ளார். அந்தியூரை சேர்ந்த உறவினரான கர்ணன், 20 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த, நவ., மாதம் அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறி, கர்ணனுடன் அந்தியூர் சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர், சூலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் அந்தியூர் சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கர்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Dec-2025