உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்ட விரோதமாக விற்க பதுக்கிய, 1,901மது பாட்டில்கள் பறிமுதல்

சட்ட விரோதமாக விற்க பதுக்கிய, 1,901மது பாட்டில்கள் பறிமுதல்

1,901 மது பாட்டில்கள் பறிமுதல்

அரசு விடுமுறை தினமான நேற்று முன்தினம் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கருமத்தம்பட்டி - சோமனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரின் பின்புறம் சோதனை செய்தனர். அங்கு, சட்டவிரோதமாக விற்க பதுக்கி வைத்திருந்த, 1,701 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ராயர்பாளையம் டாஸ்மாக் பார் அருகிலும், 200 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி